செங்குணம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 4 வது நாளில் பல்லக்கில் அம்மன் திருவீதியுலா

தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜூலை 21 அன்று முதல் நாள்தோறும் இரவில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.;

Update: 2025-07-25 02:59 GMT
பெரம்பலூர் அருகே செங்குணம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 4 வது நாளில் பல்லக்கில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது பெரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜூலை 21 அன்று முதல் நாள்தோறும் இரவில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சூலை 24 நேற்று இரவு ஆலயத்தில் அம்மனுக்கு மண்டல பூஜையுடன் தீபாதாரணை காண்பிக்கப்பட்டு வான் வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சியுடன் டிராக்டர் வாகன உதவியுடன் 4 வது நாளில் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.. அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியின் போது பக்தர்கள் சூடம், பத்தி , சாம்பிராணி, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் பூசாரியிடபம் அர்ச்சனை தட்டு அம்மனை வணங்கி மகிழ்ந்தனர். வரும் 2025 சூலை 28 திங்கள் கிழமை அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Similar News