நாட்றம்பள்ளி அருகே தவலையில் தலைமாட்டிக் கொண்ட 4 வயது சிறுவன்
நாட்றம்பள்ளி அருகே தவலையில் தலைமாட்டிக் கொண்ட 4 வயது சிறுவன்;
திருப்பத்தூர் மாவட்டமாக நாட்றம்பள்ளி அருகே தவலையில் தலைமாட்டிக் கொண்ட 4 வயது சிறுவன் அரை மணி நேரம் போராடி சிறுவனை மீட்ட தீயணைப்புத் துறையினர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார், அருணா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ரக்ஷிதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருந்த சிறிய தவலையில் இருந்த தண்ணீரை குளிப்பதற்கு மேலே எடுத்து ஊற்றியுள்ளார். அப்போது தவறி தவளை தலையில் மாட்டிக் கொண்டது. அப்போது எடுக்க முடியாமல் கத்தி கூச்சல் கிட்டு அழுத சிறுவனின் அர்த்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள் சிறுவன் தலையில் மாட்டியிருந்தால் தவளையை அகற்ற முயன்றனர். முடியாததால் உடனே நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தவலையை துண்டித்து பின்னர் சிறுவனை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.