பஸ், ஜீப் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்

படுகாயம்;

Update: 2025-10-04 13:33 GMT
மதுரையில் இருந்து தேனி நோக்கி நேற்று முன்தினம் பஸ் ஒன்று பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது. ஆண்டிபட்டி அருகே பஸ் வந்த பொழுது எதிர் திசையில் முனீஸ்வரன் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த ஜீப் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் மற்றும் ஜீப்பில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு (அக்.3) பதிவு.

Similar News