புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் உள்ள கோவிந்தராஜ் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 10-ம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் 3 வாலிபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.