ஒயின் ஷாப் அருகே வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து - 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே ஒயின் ஷாப் அருகே வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து - 4 பேர் கைது;

Update: 2025-10-15 11:33 GMT
திண்டுக்கல் சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கிவிட்டு அப்பகுதியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ரெட்டியபட்டி, RMTC-காலனியை சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன்(26) என்பவரை முன்விரோதம் காரணமாக பொன்னகரத்தை சேர்ந்த ராம்குமார்(23), ஜான்பாண்டியன்(26), விஜயபாண்டி(27), NGO-காலனியை சேர்ந்த சிவபாண்டி(27) ஆகிய 4 பேரும் கத்தியால் சரமாரியாக குத்தியும், கையால் அடித்தும், காலால் உதைத்தனர் இதில் காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பாக சித்திக் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News