குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் உடல் 4 நாட்களுக்கு பின் மீட்பு

கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் உடல் 4 நாட்களுக்கு பின் மீட்பு;

Update: 2025-10-21 14:29 GMT
திண்டுக்கல், கொடைக்கானல் ஐந்து வீடு அருவிக்கு கடந்த 18-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து சுற்றுலா வந்த 11 நண்பர்கள் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது பொள்ளாச்சி சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு பல்வேறு போராட்டங்களுக்கு பின் இன்று மருத்துவக் கல்லூரி மாணவர் நந்தகுமார் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News