பணம் வைத்து சூதாடிய வழக்கில் 4 பேர் கைது

குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-11-25 12:59 GMT
குமாரபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரந்தார்காடு காடு பகுதியில் உள்ள முள்ளுகாட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டு இருந்தனர். எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன், உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று அங்கிருந்த ஆனந்த், 39, யோகேஸ்வரன், 35, பிரபு, கார்த்தி, 33, ஆகிய நால்வரை கைது செய்த போலீசார், பணம் 950 ரூபாய் பறிமுதல் செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News