தொழிலாளர்களின் 4- சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கரூரில் ஏ ஐ டி யு சி சார்பில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் 4- சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கரூரில் ஏ ஐ டி யு சி சார்பில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்;

Update: 2025-12-09 06:43 GMT
தொழிலாளர்களின் 4- சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கரூரில் ஏ ஐ டி யு சி சார்பில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் கட்டட கட்டுமான தொழிலாளர்கள் தமிழக முழுவதும் வேலை நிறுத்தம் செய்து மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூரை அடுத்த வெண்ண வெண்ணமலை பகுதியில் செயல்படும் மாவட்ட கட்டுமான நல வாரிய அலுவலகம் முன்பு அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஜிபிஎஸ் வடிவேல் தலைமையில் வேலை நிறுத்தம் செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் கலா ராணி உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது வாரியம் மேற்கொண்ட முடி முடிவின்படி தொழிலாளர்களுக்கு பென்சன் ரூபாய் 2000 என்பதை உடனே வழங்க வலியுறுத்தியும். தொழிலாளர்களின் நான்கு தொகுப்பு சட்டங்களையும் திரும்ப பெற வல வலியுறுத்தியும். அனைத்து உதவி தொகைகளையும் உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பினர்.

Similar News