கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2025ம் ஆண்டின் திட்ட நிரலின் படி 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல்25 ம் தேதி வெளியிடப்பட்டது.இதற்கான தேர்வு வரும் ஜூலை 12ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற உள்ளது. அதன்படி, மாதிரி தேர்வுகள் வரும் 24ம் தேதி, ஜூலை 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் பகல் 1:00மணி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் போட்டோ, ஆதார் எண், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் ஆகியவற்றுடன் வரும் 19ம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04151-295422/245246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.