மன்மங்கலத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4- பேர் கைது. ரூ.29,100 பறிமுதல்.

மன்மங்கலத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4- பேர் கைது. ரூ.29,100 பறிமுதல்.;

Update: 2025-06-19 08:13 GMT
மன்மங்கலத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4- பேர் கைது. ரூ.29,100 பறிமுதல். கரூர் மாவட்டம் , வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்மங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று ஜூன் 18ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் , மண்மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள தனியார் ஹோட்டல் பின்புறம் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மண்மங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த புவனேந்திரன், இக்பால் , பால்வார்பட்டியை சேர்ந்த பாஸ்கர் , கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியை சேர்ந்த குட்டி தீன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து , அவர்கள் சூதாட பயன்படுத்திய 156 சூதாட்ட அட்டைகளையும் , ரூபாய் 29,100-ஐபறிமுதல் செய்தனர் . பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News