ஏர்ஹாரன்வைத்திருந்த 4 வாகனங்களுக்கு 40 ஆயிரம் அபராதம்
ஏர்ஹாரன்வைத்திருந்த 4 வாகனங்களுக்கு 40 ஆயிரம் அபராதம்
ஏர்ஹாரன்வைத்திருந்த 4 வாகனங்களுக்கு 40 ஆயிரம் அபராதம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையில் ஏர்ஹாரன் வைத்திருந்த 4 பஸ்களுக்கு 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சிறப்பு உத்தரவின் பேரில் இணை போக்குவரத்து ஆணையர் கோவை சரளா மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தாராபுரம் பேருந்து நிலையம் உட்பட்ட பகுதிகளில் அதிக காற்றழுப்போம் ஏர்ஹாரன்களை அகற்றும் பணிநடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜாராமன் (பொறுப்பு) ,மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் தாராபுரம் பேருந்து நிலையத்தில் சோதனை செய்தனர். நான்கு வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி ரூபாய் 40 ஆயிரம் பைன் நிர்ணயிக்கப்பட்டது . மேலும தாராபுரம் நகரத்திற்குள் வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டு அதிக காற்றுழி எழுப்பும் காற்றொளிப்பான் குழாய் பைப்புகளை அகற்றப்பட்டது. மேலும் தாராபுரம் டவுன்பஸ், ருட் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு காற்றுழிப்பான் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வும் மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது