சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்-40க்கும் மேற்பட்டோர் கைது*

சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்-40க்கும் மேற்பட்டோர் கைது*

Update: 2025-01-01 10:55 GMT
சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்-40க்கும் மேற்பட்டோர் கைது சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் சீமான் கைதை கண்டித்து அக்கட்சியினர் 40க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட சீமானை விடுவிக்க கோரியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களையும் முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News