ரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்;

Update: 2025-09-05 05:13 GMT
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூட்டையை சோதனை செய்த போது அதில் 40 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News