விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது அதன் அளவை கட்டுக்குள் வைத்துப் பயன்படுத்துவது அவசியம். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் ஒரு எக்டேருக்கு 40 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுவதாக ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.