கோவை: 40வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் !

உரிமைகள் வழங்காத அரசு மீது கடும் குற்றச்சாட்டுடன் 40 நாள் காத்திருப்பு போராட்டம்.;

Update: 2025-09-27 08:24 GMT
கோவை சுங்கம் போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 40 நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறியதாவது, பணியாளர்கள் 30 ஆண்டுகளாக சேமித்த பிஎப், கிராஜுவிட்டி உள்ளிட்ட தொகைகள் 25 மாதங்களாக வழங்கப்படாமல் அரசு கையில் உள்ளது. இதனால் ஓய்வுபெற்றோர் கடன் வாங்கி வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய பஞ்சப்படி, அரியர்ஸ் உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காலி பணியிடங்களில் கருணை அடிப்படையிலான நியமனங்களும் செய்யப்படவில்லை. அரசு கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய் தொழிலாளர் நிதியை பிடித்துள்ளதோடு, அவுட்சோர்சிங் முறையில் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையும் நடைபெறுகிறது என்று அவர் குற்றம்சாட்டினார். “நீண்டகால போராட்டம் எங்கள் விருப்பமல்ல; அரசு அநீதி செய்வதால் தான் இந்த போராட்டம். உடனடி தீர்வு கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தம் தவிர வழியில்லை,” என சௌந்தரராஜன் எச்சரித்தார்.

Similar News