தங்கம் மருத்துவமனையின் மொபைல் மருத்துவ சேவை துவக்கம்.
Aster அறக்கட்டளை, Ashok leyland அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ தங்கம் சாரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் மொபைல் மருத்துவ சேவை துவக்கம்;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2024-12-21 10:15 GMT
மொபைல் மருத்துவ சேவை தங்கம் மருத்துவமனையின் நிறுவனர் மரு.இரா.குழந்தைவேல் அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்டது. இவ்வாகனத்தின் மூலம் நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு மருத்துவம் மற்றும் புற்றுநோய் சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்படும். இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனை வழங்கப்படும்.இந்த மொபைல் மருத்துவ சேவை மூலம் நாமக்கல் மக்கள் மிகுந்த பயனடைவர்.