தேனி ஃபாரஸ்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள நாடார் கலைவாணி பாலர் பள்ளியில் 41-வது ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளியின் சார்பில் நேற்று (பிப்.21) 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மழலை செல்வங்களுக்கு இன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி குழந்தைகளை பாராட்டி மகிழ்ந்தனர்.