பிரபல கஞ்சா வியாபாரி கைது - 4.1/2 கிலோ கஞ்சா பறிமுதல்
வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் விற்பனைக்காக ஒரிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்த பிரபல கஞ்சா வியாபாரி கைது - 4.1/2 கிலோ கஞ்சா பறிமுதல்;
திண்டுக்கல், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன், சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காந்திநகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதே பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி லட்சுமிநாராயணன்(42) என்றும் இவர் வத்தலகுண்டு பகுதியில் விற்பனைக்காக கஞ்சா ஒடிசாவில் இருந்து வாங்கி ரயில் மூலம் வந்து பிறகு பஸ் மூலம் வத்தலகுண்டு வந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் லட்சுமி நாராயணனை கைது செய்து அவரிடமிருந்து 4.1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.