சிவகங்கை மாவட்டத்தில் 4,294 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை
குரூப் 4 தேர்வில் 4,294 மாணவர்கள் பங்கேற்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல்;
தமிழகம் முழுவதும் இன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 4 (குரூப் 4) தேர்வு நடைபெற்ற நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்கு 26,392 மாணவர்கள் விண்ணப்பித்திறந்த நிலையில், 22,098 மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும் 4,294 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது