மூதாட்டியிடம் 4.3/4 பவுன் நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே மூதாட்டியிடம் 4.3/4 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வாலிபர் கைது;

Update: 2025-09-13 07:33 GMT
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே இருளகுடும்பன்பட்டியை சேர்ந்த அழகாத்தாள்(75) சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் வீட்டின் கதவை தட்டி உதவி கேட்பது போல் நடித்து அழகாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 4.3/4 பவுன் தங்கச் சங்கிலி பறித்து சென்றது தொடர்பாக ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த பிரபுகுமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 4.3/4 பவுன் செயினை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News