குமாரபாளையத்தில் பெண் ஒருவர் மாயம்; தேடுதல் பணியில் போலீசார்!!
குமாரபாளையத்தில் மீண்டும் பெண் மாயமானதால், போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.;
Update: 2025-03-31 09:42 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சிவசக்தி நகரில் வசிப்பவர் மேகலா, 29. சமையல் கூலி வேலை. இவர் சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த மணி என்ற நபருடன், இவர் 7 மாதங்கள் முன்பு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் முன்பு மீண்டும் வந்த இவர், .மார்ச். 27ல் மீண்டும் சென்றுவிட்டார். இவரது கணவர் ஜெகதீஷ், 34, குமாரபாளையம் போலீசில் தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். இதன்படி குமாரபாளையம் போலீசார் காணாமல் போன மேகலாவை தேடி வருகின்றனர்.