மரக்காணம் அருகே இலங்கை தமிழர்களுக்கு 440 வீடு ஒப்படைப்பு

காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்;

Update: 2025-07-07 16:31 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக விழுப்புரம் மாவட்டம் - மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்களுக்கு 440 வீடுகளை திறந்து வைத்தார், அதனை தொடர்ந்து முன்னாள் மஸ்தான் எம்எல்ஏ, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் ஆகியோர் நேரில் சென்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பயனாளிகளிடம் வீட்டு சாவியை வழங்கினர். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக்.அப்துல் ரகுமான்,அரசு அதிகாரிகள் மற்றும் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News