ராமநாதபுரம் 45 பவுன் நகை திருட்டு
திரு உத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தில் ஒரே நாளில் 45 பவுன் நகை திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது;
ராமநாதபுரம் திரு உத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தில் ஒரே நாளில் 45 பவுன் நகை திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது ராமநாதபுரத்தை அடுத்த திரு உத்திரகோசமங்கை பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மங்கள நாத சுவாமி கோவிலில் கடந்த நான்காம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது உலகின் முதல் சிவாலயம் என்று போற்றப்படும் இத்திருத்தளத்தில் சந்தன காப்பு கலையப்பட்ட மரகத நடராஜரை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அன்று ஒரு நாள் மட்டும் 45 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம் தொடர்பாக திருஉத்திரகோசமங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.