தரகம்பட்டி- ரூ 45 லட்சம் மதிப்பில் அரசு மாதிரி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி.

தரகம்பட்டி- ரூ 45 லட்சம் மதிப்பில் அரசு மாதிரி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி.;

Update: 2025-07-24 11:05 GMT
தரகம்பட்டி- ரூ 45 லட்சம் மதிப்பில் அரசு மாதிரி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி. கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி கரூர் மாவட்டத்தில் முன்மாதிரியாக செயல்படும் அரசு பள்ளி ஆகும். பள்ளி துவக்கி பல ஆண்டுகளாகியும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்ததின் பேரில் இன்று ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளியின் தலைமை ஆசிரியர்,முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் தங்கராஜ் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுற்றுச்சுவர் பணி துவக்க விழாவை சிறப்பித்தனர்.

Similar News