உடுமலையில் மறைந்த மனைவியின் நினைவாக 450 பேருக்கு உதவி
பொதுமக்கள் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 10 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் சுமார் 450 க்கு மேற்பட்டோருக்கு 9 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் , சேலை போர்வை அடங்கிய 22 பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் நிசார் அகமது ,அனைத்து துறை ஓய்வு ஊழியர்கள் சங்கம் உடுமலை வட்ட கிளை தலைவர் தாசன் , உடுமலை நகர கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் துரைராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட நிர்வாகி சுதா சுப்பிரமணியம் , நகரகூட்டுறவு பண்டக சாலை எழுத்தர் லதா, கணக்கம்பாளையம் குடியிருப்போர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் ,ஓய்வு பெற்ற வட்டாச்சியர் நடராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .உடுமலையில் கூட்டுறவுத்துறை ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் ஒருவர் மறைந்த தனது மனைவி நினைவாக 10 ஆம் ஆண்டாக ஏழை எளிய மக்களுக்கு 9 லட்சம் செலவில் 450 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.