தட்டச்சு தேர்வுகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மாநிலம் முழுவதும் 4500 பயிற்சி மையங்கள் பாதிப்பு....
ஶ்ரீவில்லிபுத்தூரில் தட்டச்சு தேர்வுகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மாநிலம் முழுவதும் 4500 பயிற்சி மையங்கள் பாதிப்பு.... ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற்று பழைய நடைமுறையை செயல்படுத்த முதலமைச்சருக்கு வேண்டுகோள்...*;
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் தட்டச்சு தேர்வுகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மாநிலம் முழுவதும் 4500 பயிற்சி மையங்கள் பாதிப்பு.... ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற்று பழைய நடைமுறையை செயல்படுத்த முதலமைச்சருக்கு வேண்டுகோள்... தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கான தேர்வு நடைமுறை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நடைமுறை கடந்த வருடம் மாற்றி அமைக்கப்பட்டதால் இந்த மாற்றத்தினால் 4500 பயிற்சி மையங்கள் இழுத்து மூட வாய்ப்பு உள்ளதாகவும், உடனடியாக இதை அரசு திரும்ப பெற வேண்டும் என்று தட்டெழுத்து பயிற்சி சங்கங்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 4500 தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களின் மூலமாக நேரடியாக சுமார் 20000 பேரும் மறைமுகமாக சுமார் 30000 பேரும் ஆக மொத்தம் 50 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர். தட்டெழுத்து பயிற்சி பெற்றவர்கள் COA என்ற தேர்வு எழுதிய பின்பே அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் 187 என்ற அரசாணை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் பிரகாரம் தட்டெழுத்து பயிற்சி பள்ளிகளில் உள்ள தட்டெழுத்து இயந்திரத்திற்கு மாறாக கணினி மூலமாகவே பயிற்சி பெற வேண்டும் என்றும் மேலும் இதன் மூலம் நேரடியாகவே சி ஓ ஏ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த அறிவிப்பால் மாநிலம் முழுவதும் இயங்கி வரும் 4500 தட்டெழுத்து பயிற்சி மையங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த தட்டெழுத்து இயந்திரங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் ஏற்கனவே முதலீடு செய்து தட்டெடுத்து இயந்திரங்களை வாங்கி வைத்திருக்கும் பயிற்சி மையங்களின் உரிமையாளர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவார்கள் மேலும் தற்போதுள்ள இயந்திரமானது முற்றிலுமாக முடங்கி முழுக்க முழுக்க கணினி பயன்பாட்டிலேயே தட்டெழுத்து பயிற்சி மையங்கள் செயல்பட வேண்டும் என்ற உத்தரவு காரணமாக புதிதாக கணினி வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு தட்டெழுத்து பயிற்சி மையங்கள் தள்ளப்பட்டுள்ளன இதனை மறுபரிசலை செய்ய வேண்டும் என தட்டெழுத்து பயிற்சி மையங்களின் மாநில தலைவர் சோம.சங்கர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் அளித்துள்ள பேட்டியில் தமிழக அரசின் 187 என்ற அரசாணையின் காரணமாக ஏற்கனவே ஏங்கிக் கொண்டிருக்கும் 4500 பயிற்சி மையங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும் இதனால் 50,000 பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பயிற்சி மையங்கள் பெண்களால் நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர்களுக்கான சுய வேலைவாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டு இருப்பதாகவும் ஆகையால் முதலமைச்சர் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு ஏற்கனவே அறிவித்துள்ள அரசு ஆணை 187 i திரும்பப் பெற்று பழைய நடைமுறையை செயல்படுத்தி இத்தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.