தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.64 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்
துறைமங்கலம், கலைஞர் கருணாநிதி நகரில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.;
பெரம்பலூர் மாவட்டம் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.64 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தினசரி காய்கனி சந்தை, துறைமங்கலம் காவலர் குடியிருப்பு, கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், இன்று (04.05.2025) ரூ.4.64 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண் நேரு அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் , நகர்மன்றத் தலைவர் திருமதி அம்பிகா இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வளர்ச்சித் திட்ட பணிகள், தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்திடும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த தினசரி காய்கனி சந்தை கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், அந்தக் கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25 ன் கீழ் ரூ.248 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தினசரி காய்கனி அங்காடி புதிய கட்டிடத்தில் 93 கடைகளுடன் அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு அதற்கான கட்டுமானப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.200.00 லட்சத்திற்கு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 26 இடங்களில் 4.241 கி.மீ தூரத்திற்கு சாலைகள் மேம்பாடு செய்திட நிதி ஒதுக்கப்பட்டு இப்பணிகளை தொடங்கிடும் விதமாக துறைமங்கலம் காவலர் குடியிருப்பு பகுதியில் சாலை மேம்பாடு செய்யும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. துறைமங்கலம், கலைஞர் கருணாநிதி நகரில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரம் செய்வதற்காக ரூ.10.20 லட்சம் மதிப்பீட்டில் கனரா வங்கியின் சமூகப்பொறுப்பு நிதியின் கீழ் நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள மின்கல திடக்கழிவு சேகர வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட மக்களுக்கான அனைத்து அடிப்படை தேவைகளும் அரசின் திட்டங்களால் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், நகராட்சி ஆணையர் ராமர், நகர்மன்றத் துணைத் தலைவர் து.ஆதவன் (எ) ஹரி பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், ததுரைசாமி, நகராட்சிப் பொறியாளர் பாண்டியராஜ், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.