சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் 47வது நாள் மண்டல சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சங்ககிரி: சோமேஸ்வரர் கோயிலில் 47வது நாள் மண்டல சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 47வது நாள் மண்டல பூஜையையொட்டி வன்னியர் சங்கத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் கடந்த 30 ஆண்களுக்கு பின்னர் ஜூலை 12 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தது இந்நிலையில் 47வது நாள் மண்டல பூஜைகள் வன்னியர்சங்கத்தின் சார்பில் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் சங்ககிரி நகர், வி.என்.பாளையம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச்சென்றனர். வன்னியர் சங்கத்தின் சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலையில் உணவுகள் பரிமாபட்டன மேலும் மண்டல பூஜையையொட்டி கோயில் வளாகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பூஜைக்கு வந்திருந்த பக்தர்களுக்கு 1500க்கும் மேற்பட்ட தென்னமரக்கன்றுகள் வழங்கப்பட்டது.