விருத்தாசலம் அருகே பள்ளியின் பூட்டை உடைத்து 47 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டர் திருட்டு

தொடர் திருட்டால் ஆசிரியர்கள் மாணவர்கள் பீதி

Update: 2024-08-29 13:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம், ஆக.30- விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 825 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 31 பேர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வழக்கம் போல பள்ளி முடிந்ததும் பள்ளியின் வகுப்பறைகள் அனைத்தும் மூடப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலை புதன்கிழமை வந்து பார்த்தபோது பள்ளியில் உள்ள ஒரு அறையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்த போது 47 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டர் ஒன்று திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து ஆசிரியர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பள்ளியில் நுழைந்து பிரிண்டரை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதேபோல இப்பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கர் ஒன்றும், கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு  3 லேப்டாப்பும் திருடு போனது. இப்பள்ளியில் உள்ள விலை மதிப்புள்ள பொருட்கள் தொடர்ந்து திருடு போவதால் திருடர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News