பெண்கள் உட்பட 470 பேர் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல்லில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 470 பேர் மீது வழக்கு பதிவு;
திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 254 பெண்கள் உட்பட 470 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.