அரசு பஸ் டயர் கழன்ற விவகாரத்தில் 5 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்

குமாரபாளையம் அருகே அரசு பஸ் டயர் கழன்ற விவகாரத்தில் 5 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2024-07-18 12:47 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பஸ் டயர் கழன்ற விவகாரத்தில் 5 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொது மேலாளர் ஸ்வர்ணலதா தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை லிமிடெட், ஈரோடு மண்டலத்தை சேர்ந்த டி.என்.33 என்.3045 என்ற அரசு பஸ், குமாரபாளையம் அருகில் முன் இடது சக்கரம் கழன்றது சம்பந்தமாக, ஜூலை 18ல் சமூக வலை தளங்களில் பகிரப்படும் செய்திக்கு கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிடப்படுகிறது. இந்த பஸ் ஜூலை 17ல் சங்ககிரி அருகே கேம் பைண்டிங் என்ற குறைபாடு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் பொருட்டு, பயணிகள் இல்லாமல் பஸ்சை பணிமனைக்கு எடுத்து வரும் போது குமாரபாளையம் என்ற இடத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பராமரிப்பு பணி பார்த்த தொழிநுட்ப பணியாளர் ஜெயபிரகாஷ், போர்மேன் செல்வகுமார், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் கிளை மேலாளர், தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்ட 5 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News