வேலகவுண்டம்பட்டி அருகே ஐ.டி. ஊழியர் கொலை5 பேர் கைது.
வேலகவுண்டம்பட்டி அருகே ஐ.டி. ஊழியர் கொலை 5 பேர்களை போலீசார் கைது செய்தனர்.;
பரமத்தி வேலூர், ஜன.6: பரமத்தி வேலூர் தாலுகா, வேலகவுண்டம்பட்டி அடுத்த சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐ.டி. நிறுவனர் ஊழியர் சஞ்சய், 22. கடந்த, 1 ஆம் தேதி வேலகவுண்டம் பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது சிலர் அவரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில், 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புத்தூரை சேர்ந்த சண்முகம் மகன் சூர்யா, (26, வேலகவுண்டம்பட்டி பெருகாம்பாளையம்,பகுதியை சேர்ந்த, சிறுவன், முதலைப்பட்டி அடுத்த செல்லிபாளையம் தினேஷ், (32), சிங்கிலிபட்டி சரவணன் மகன் சஞ்சய், மரூர்பட்டி, கந்துக் கார தோட்டத்தை சேர்ந்த மேஸ்திரி சங்கர், (39) ஆகியோர், சஞ்சயை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் சிறுவனை சேலம் கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 4 பேரைகளை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.