பேராவூரணியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.
காத்திருப்பு போராட்டம்.;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் சுரேஷ், வட்டப் பொருளாளர் செல்வகணபதி முன்னிலை வகித்தனர். காத்திருப்புப் போராட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர் இறந்து விட்டால் அந்த குடும்ப வாரிசு அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும். கடந்த 2007 க்கு பிறகு பணிக்கு வந்த சிபிஎஸ் திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்றும், இறந்து போன கிராம உதவியாளர்களின் பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை கிராம பணி பார்ப்பதற்காக பணி அமர்த்தப்பட்டவர்களை கிராமப் பணியை தவிர பல்வேறு மாற்று பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வலியுறுத்தியும், மேற்கொண்ட கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றித் தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 25க்கும் மேற்பட்ட ஆண், பெண் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.