கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கிய 5 பேர் மீது வழக்கு.
அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது திருச்சி பாலக்கரை போலீசார் வழக்கு;
திருச்சி பாலக்கரை ரெயில்வே காலனி பெல்ஸ் மைதானத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் போஸ்கோ (வயது 21). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகி றார். இந்நிலையில் இவருக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்த சூர்யா என்பவரின் நண்பருக்கும் இடையே தங்கள் பகுதிக்குள் நுழைவது தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே போஸ்கோ நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூர்யா உள்பட 5 பேர், தகாத வார்த்தைகளால் போஸ்கோவை திட்டி, அரிவாளால் தாக் கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த போஸ்கோ, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், பாலக்கரை போலீசார் சூர்யா, அழகேசன், முத்து, மணிபாரதி, கார்த்தி ஆகிய 5 பேர் மீது வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.