வேதாரண்யம் வாட்ஸ் அப் சேனலில் 5 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க முடிவு

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்;

Update: 2025-03-21 06:01 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகர திமுக வார்டு செயலாளர்கள், பாக நிலை முகவர்கள் மற்றும் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நகர அவைத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு,நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாரிபாலன், துணை ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி வெங்கட்,நகர ஒருங்கிணைப்பாளர்கள் கோபி கிருஷ்ணா, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேதாரண்யம் நகர திமுக செயலாளரும், நகராட்சி தலைவருமான மா.மீ.புகழேந்தி, நாகைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நகர திமுக செயல்பாடுகளை பாராட்டியதை எடுத்து காட்டி பேசினார். மேலும், கட்சிப் பணி சிறப்பதற்கும், வருகிற சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவரின் 200 இலக்கை எட்டுவதற்கும், மீண்டும் திமுக ஆட்சி அமைய தொடர்ந்து உழைத்திட வேண்டும் என்றார். கூட்டத்தில், வேதாரண்யம் நகரத்தில், 5 ஆயிரம் நபர்களை திமுக ஐடிவிங்க் வாட்ஸ் அப் சேனலில் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணி தொடங்க நடவடிக்கை எடுப்பது, வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிராமத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, வேதாரண்யம் முல்லை பூவிற்கு புவி சார் குறியீடு பெற, வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாகை மாவட்ட திமுக செயலாளர கெளதமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News