சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

வழக்கு;

Update: 2025-04-02 03:37 GMT
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் கடந்த ஆண்டு ஏப்., மாதம் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சிறுமி தற்போது, 4 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சின்னசேலம் மகளிர் ஊர் நல அலுவலர் கண்ணம்மா, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த மணிகண்டன் மற்றும் அவரது தந்தை செல்வராஜ், தாய் பழனியம்மாள், சிறுமியின் தந்தை குமார், தாய் உமா ஆகிய 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News