ராணிப்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டி 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தேனீக்கள் கொட்டி 5 பேர் மருத்துவமனையில் அனுமதி;
ராணிப்பேட்டை அருகே நவல்பூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்திற்கு வெளியே உள்ள வேப்பமரத்தில் தேனீக்கள் கூடு கட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில், திடீரென தேனீக்கள் கூடு கலந்து அதில் இருந்து வெளியே வந்த சில தேனீக்கள், மரத்திற்கு அடியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், தேன் கூட்டை பாதுகாப்பாக அகற்றி எடுத்து சென்றனர்.