ஆம்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.

ஆம்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.;

Update: 2025-04-05 00:04 GMT
ஆம்பூர் அருகே  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை. திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (54). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த 22.-12.-2020 அன்று அதே பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.. அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்து அங்கிருந்து விஜயன் தப்பி சென்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விஜயன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கின் இறுதி விசாரணை முடிந்து விஜயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ-.3 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.

Similar News