வெள்ளகோவிலில் சேவல் சூதாட்டம் 5 பேர் கைது
வெள்ளக்கோவிலில் சேவல் சூதாட்டம் 5 பேர் கைது பணம் மற்றும் சேவல் பறிமுதல்;
வெள்ளகோவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், தலைமை காவலர் கோபிநாத் மற்றும் போலீசார் முத்தூர் பகுதியில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஈ.பி. நகர் அருகில் உள்ள பொய்யேரி மேடு. வாய்க்கால் பகுதியில் பணம் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடந்தது தெரிய வந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சித்தோடு. லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 50), முத்தூர் வேலம்பாளையம் தங்கவேல் (51), பழனி கவுண்டன் வலசு மாரிமுத்து (50), முத்துமங்கலம் நடராஜ் (47), பொய்யேரி மேடு கோவிந்தராஜ் (46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரூ.700 மற்றும் 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்படடன.