தென்காசி மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்

புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்;

Update: 2025-04-24 01:17 GMT
தென்காசி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி, கிராமபஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் தரிசு, கல்லாங்குத்து பாறை,காடு,கிராமநத்தம்,அரசு நஞ்சை புஞ்சை ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படவுள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தென்காசிமாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் 2 செண்ட் மற்றும் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 3 செண்ட் க்குள் அரசு புறம்போக்கு நிலங்களான தீர்வை ஏற்பட்ட மற்றும் தீர்வை ஏற்படாத தரிசு, கல்லாங்குத்து/பாறை/கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை/புஞ்சை ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்குமேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு ஆக்கிரமிப்பினை வரன்முறை செய்து பட்டா வழங்குமாறு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,5 ஆண்டுகளுக்குமேலாகவீடு கட்டி குடியிருந்துவரும் மக்கள் ஆதார் கார்டு, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு இரசீது, வீட்டுத் தீர்வை இரசீது, சமையல் எரிவாயு அடையாள அட்டை/வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் (30.04.2025)தேதிக்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல். கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News