மே 5ல் வணிகர் தின மாநில மாநாட்டில், குடும்பத்துடன் பங்கேற்க மாவட்ட தலைவர் வேண்டுகோள்.
வணிகர் தினத்தை முன்னிட்டு, வருகிற மே 5ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில், கடைகளுக்கு விடுமுறை அளித்து வணிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணிகர் தினத்தை முன்னிட்டு, மதுராந்தகத்தில் வருகிற மே 5ம் தேதி மாலை 3.30 மணிக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 42வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு நடைபெற உள்ள்ளது. மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்கிறார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநாடு தீர்மானம் வாசிக்கிறார். பேரமைப்பின் மண்டல தலைவர்கள் வகிக்கின்றனர். முன்னிலைதமிழக முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். மேலும், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அனைத்து இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகள், பல்வேறு தொழில் சார்ந்த கலந்துகொள்கின்றனர். தொழிலதிபர்கள்வரும், மே 5ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் விடுமுறை கடைகளுக்கு முழு அளித்து, அனைத்து வணிகர்களும் குடும்பத்துடன் திரளாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். வணிகர் உரிமையை மீட்டெடுக்கவும், வணிகர் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வணிகர் திருப்புமுனையை இன வரலாற்றில் ஏற்படுத்தவும், இம்மாநாட்டுக்கு வணிகர்கள் அனைவரும் வரவேண்டும். தமிழகம் முழுவதிலு இருந்து, லட்சக்கனக்கான வணிகர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 200க்கும்