பக்ரீத் பண்டிகை கன்னிவாடி சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கன்னிவாடி ஆட்டு சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை;

Update: 2025-06-06 14:38 GMT
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாப்படுகிறது. இதை யொட்டி நேற்று கன்னிவாடி சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முஸ்லிம்கள் தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் வீட்டு அருகில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்குவார்கள். இதில் பிரியாணி முக்கிய இடம் வகிக்கும். அதன் காரணமாக ஆடுகளின் விற்பனை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கன்னிவாடியில் உள்ள ஆட்டுச்சந்தையில் கடந்த 2 வாரங்களாக ஆடுகள் விற்பனை களை கட்டி வருகிறது. நேற்று நடந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். மேலும் ஆடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. சுமார் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆட்டுக்கிடாய்கள் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News