சேலம் அருகே உள்ள தாதம்பட்டி, அல்லிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் முத்துராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் கஞ்சா விற்று கொண்டிருந்த தாதம்பட்டியை சேர்ந்த விஜயா (வயது 50), அவருடைய மகனான மதியழகன் (21) மற்றும் வாய்க்கால்பட்டறையை சேர்ந்த கிரி (24), கோகுல் (23), ஈஸ்வரமூர்த்தி (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 600 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.