கிருஷ்ணகிரி:குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ரூ.5 லட்சத்திற்கு காப்பீடு அட்டை வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி:குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ரூ.5 லட்சத்திற்கு காப்பீடு அட்டை வழங்கிய கலெக்டர்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 09.06.2025 கே.பூசாரிப்பட்டி காலணியை சேர்ந்த எல்லப்பன், ஸ்ரீதேவி அவர்களின் குழந்தை செல்வி பேரரசி (வயது-4) லூப் கொலஸ்டிரமைன் நோய்க்கான சிகிச்சைக்கு உதவிடுமாறு மனு அளித்தின் பேரில் உடனடி நடவடிக்கையாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி, மேல் சிகிச்சை மேற்கொள்ள தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட திட்ட அலுவலர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்) செந்தில்நாதன் ஆகியோர் உள்ளனர்.