கோவை: 5 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசா மாநில வாலிபர் கைது

பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபர் கைது.;

Update: 2025-06-25 00:50 GMT
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதன்படி, பேரூர் காவல் நிலைய எல்லையில் நேற்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிரன்ஜிப் ஜெனா @ முன்னா (வயது 28) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News