திருமானூர் பகுதியில் கட்சியில் தங்களை இணைந்த கொண்ட 5. க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு புத்தகம் வழங்கி கௌரவித்து வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர
திருமானூரில் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநிலக் குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் புத்தகங்களை வழங்கி கௌரவித்து வரவேற்றார்.;
அரியலூர், ஜூலை.3- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் தலைமையிலான குழுவினர் குடிமனை மற்றும் குடிமனை பட்டா கோரும் பொதுமக்களின் மனுக்களை பெறுவதற்காக திருமானூர் ஒன்றியம் முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது திருமானூர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடிமனை, குடிமனை பட்டா கூறும் மனுக்களை பலரும் மாநில குழு உறுப்பினர் ஐ..வி.நாகராஜனிடம் வழங்கினர். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை குறித்து கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேட்டுத்தெரு, அரண்மனைகுறிச்சி ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்தும் ராஜ்குமார், மேகநாதன், கருப்புசாமி, சிவக்குமார் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் கோரிக்கை மனுக்களை கொடுத்ததுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் கட்சியில் இணைந்த இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் புத்தகங்கள் வழங்கி கௌரவித்து வரவேற்றார்.இதில் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, திருமானூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி சாமிதுரை, மாவட்ட குழு உறுப்பினர் எ.ஏசுதாஸ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிள்ளைராஜா, சுதாகர், ஆர்.புனிதன், சுப்புகார்த்தி, மூத்ததோழர் ஏ சவுரிராஜன், , .விவசாய சங்க ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.