பட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு 5 வயது மாணவன் உலக சாதனை

உலக சாதனை;

Update: 2025-07-06 14:11 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.வேலாயுதம் - கனிமொழி ஆகியோரின் மகன் வே.ஆருஷ்வம்சி ( வயது 5 ) கராத்தேவில் 15 நிமிடங்களில் 2240 பஞ்ச் மற்றும் 1120 கிக் செய்து உலக சாதனை படைத்தார். இதில், சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்  எம்.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். முன்னதாக சாதனை நிகழ்ச்சியை, போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மாணவரது சாதனையை அல்டிமேட் உலக சாதனை நிறுவனத்திலிருந்து வந்த டாக்டர் எஸ்.முகம்மது சபீர் மற்றும் கே.பாலதினேஷ் ஆகியோர் ஆய்வு செய்து பதிவு செய்தனர். காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து, உலக சாதனை புரிந்த மாணவனுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பயிற்சியாளர் எம்.மணிமாறன் மாணவனை உலக சாதனை செய்ய தயார்படுத்தி ஊக்கத்தை அளித்தார். இந்நிகழ்வில், தமிழக முதலமைச்சர் அறிவித்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகத்தை மாணவர்கள் கையில் ஏந்தி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். நிறைவாக டேலண்ட் பள்ளியின் தாளாளர் கே.வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Similar News