டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் விசாரணைக்கு நீதிபதி அனுமதி
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவை, 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.;
1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவை, 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் தலைமறைவாக இருந்த ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வைத்தது குறித்து விசாரணை மேற்கொண்டு, அவரது தொடர்புகள் மற்றும் அடைக்கலம் அளித்தவர்கள் தொடர்பான தகவல்களை பெற போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். முதல் கட்டமாக 10 நாட்கள் காவலுக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், நீதிபதி 5 நாள் அனுமதியளித்து, ஜூலை 21 ஆம் தேதி மாலை ராஜாவை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.