திருப்பத்தூர் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

திருப்பத்தூர் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2025-07-23 11:30 GMT
சிவகங்கை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் கணேசன் இன்று காலை வழக்கம் போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டு உடைக்கப்பட்ட கடையை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பூட்டை உடைத்து பொருட்களை திருட முயன்றுள்ளதும், ஆனால் எந்த பொருளும் திருடு போகாது தெரிய வந்துள்ளது. இதை கண்டு நிம்மதி அடைந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது பெரும் தலைவலியாக மாறியது. சிவகங்கை சாலையில் உள்ள அடுத்தடுத்த 4 கடைகள் என மொத்தம் 5 கடைகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து மேலும் விசாரணையை துவக்கினர். அப்போது வெங்கடாஜலபதி பைனான்ஸ் கடையில் 10 ஜோடி வெள்ளி கொலுசுகளும், வள்ளி பைனான்ஸ் கடையில் ரூபாய் 6000 பணமும், மும்பை சலூன் கடையில் ரூ 1500 ரொக்கமும், நுட வைத்தியசாலை கடையில் ரூ 2000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து விரல் ரேகை பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News