தீப்பெட்டி ஆலையில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு..... தீப்பெட்டி ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் ச
தீப்பெட்டி ஆலையில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு..... தீப்பெட்டி ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்;
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு..... தீப்பெட்டி ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு போலிட்ட பல்வேறு கட்டிடங்களில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இதனை தடுக்க வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் ருத்ரப்பன் என்பவருக்கு சொந்தமான செயல்படாத தீப்பெட்டி ஆலையில் சட்டவிரோதமாக வானில் சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசு தயாரித்தது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பேர் அதிகாரிகளை கண்டு தப்பி ஓடினர். இதையடுத்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீப்பெட்டி ஆலைக்கு சீல் வைத்து ருத்ரப்பன் மற்றும் ராமர் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.